என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர்"
- காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,
- 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெரும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருள் அரசி, தனஜெயன், லட்சுமி, குமாரி, பவானி, வடிவுக்கரசி, முத்துலட்சுமி, சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலர் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலக சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ராகவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சங்கத்தின் மாநில துணைத்த லைவர் அபராஜிதன் உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகள் குறித்த கோஷங்கள் எழுப்பினர்.
- சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா நடந்தது.
- ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க அமைப்பு தினத்தையொட்டி கொடியேற்று விழா யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
அதன்பின் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் குழுவினரிடம், சத்துணவு பணியாளர்கள், சத்துணவு சமையல் கூட சாவியை ஒப்படைக்க சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு வழங்கினர்.
சங்கத்தின் ஒன்றிய தலைவர் சூசைநாதன் தலைமையில் செயலாளர் பிச்சையம்மாள் கோரிக்கை விளக்கமளித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி. துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திகா ராணி நன்றி கூறினார்.
- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உஷா தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் கவிதா வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் தமிழரசன், மாவட்ட இணை செயலாளர் சௌடையா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மாலா நன்றி கூறினார்.
- சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும்.
- மாவட்ட தலைநகரங்களில் வரும் 30ந் தேதி தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் :
தமிழகத்தில் முதல் கட்டமாக துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமுல்படுத்த பட்டு உள்ளது. இத்திட்டத்தை அம்மா உணவகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மடத்துக்குளம் வட்டார கிளை தலைவர் அபிராமி ,செயலாளர் பூங்கோதை, பொருளாளர் தனலட்சுமி ,மாவட்ட இணைச்செயலாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் சத்துணவு ஊழியர்களின் 40 ஆண்டு கால வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 30ந் தேதி தர்ணா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல உடுமலை ஒன்றிய அலுவலகம் முன்பும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- ஜி.பி.எப் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும்.
- சிறப்பு ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும்.
பல்லடம் :
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றியத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயலட்சுமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தின் போது ஜி. பி. எப் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்துள்ள அனைவருக்கும் சிறப்பு ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடியிருந்தவர்கள் கோஷமிட்டனர். மேலும் அங்கேயே சமையல் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கியம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மெர்சி, சுதா, ராஜேஸ்வரி உள்பட நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். மதியம் தொடங்கிய இந்த போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு ) சிவ சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆகஸ்ட் மாதம் 4 ந்தேதி மற்றும் 20ந்தேதிகளில் இரண்டு தவணைகளில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் ராமதேவர் வீதியை சேர்ந்தவர் பாண்டியனின் மனைவி ஈஸ்வரி (வயது 69). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். இவரது மகன் பொள்ளாச்சியில் வசித்து வருகிறார். ஈஸ்வரி தனது அண்ணனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஈஸ்வரி திடீரென தீ குளித்தார். உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வருவதாக போலீசார் கூறினர்.
உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி மலர்(வயது42). இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முத்துலா புரம் அருகே சென்றபோது சாலையோரம் கேபிள் டிவி பராமரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த ஏணி திடீரென சரிந்து இவர்கள் மீது விழுந்தது.
இதில் மலர் படுகாயமடைந்து உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்த ஆறுமுகக்குமார், கபிலேஷ், கார்த்திக் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் மதுக்கடை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இதில் ஆறுமுககுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்